இன்றைய ஆட்டத்தில் புதிய சாதனை படைப்பாரா கோலி?

471

ஐபிஎல் 2019 சீசன் தொடங்குவதற்கு முன்பு 5 ஆயிரம் ரன்னை எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, விராட் கோலி இடையே போட்டி இருந்தது. இருவருக்கும் முறையே 15 மற்றும் 52 ரன் தேவைப்பட்டது.

சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தின் போது விராட் கோலிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வாய்ப்பை தவறவிட்டார். 2-வது பேட்டிங்கின்போது ரெய்னா 15 ரன்னை எடுத்து ஐபிஎல்-லில் 5 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.

மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனான விராட் கோலி 5 ஆயிரம் ரன்னை எடுப்பாரா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு அவருக்கு இன்னும் 46 ரன்னே தேவை.

கோலி 156 இன்னிங்சில் விளையாடி 4954 ரன் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் 46 ரன்னைத் தாண்டினால் 5 ஆயிரம் ரன்னை எடுக்கும் 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் கோலி சென்னை சூப்பர் கிங்சிக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். அதை சரிகட்டும் வகையில் இன்று முத்திரை பதிக்கும் வகையில் ஆடி 5 ஆயிரம் ரன்னை தொடும் ஆர்வத்தில் உள்ளார்.

ஒட்டு மொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த ‘டாப் 5’ வீரர்கள் 

1. ரெய்னா – 5034 ரன்

2. விராட் கோலி – 4954 ரன்

3. ரோகித் சர்மா – 4507 ரன்

4. உத்தப்பா – 4231 ரன்

5. காம்பீர் – 4217 ரன்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of