வீழ்வேன் என்று நினைத்தாயோ.., 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை விழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி

467

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் 39 வது லீக் ஆட்டத்தில் ‘தல’ தோனி தலைமையிலான சென்னை அணியும் மற்றும் விராட் தலைமையிலான பெங்களூர் அணியும் பெங்களூர் மைதானத்தில் பல பரிட்சை மேற்கொண்டனர்.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தனர். இதன் பின்பு களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டகாரங்களான பர்தீவ் பட்டேல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் தங்களில் ரன் வேட்டையை தொடங்கினர்.இருப்பினும் இவர்களால் சொந்த மண்ணில் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியால் சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனர். அதில் விராட் கோலி 9 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய டி வில்லியர்ஸ் 25 ரன்களும், அக்‌ஷ்தீப் நாத் 24 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இந்நிலையில், சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பர்தீவ் பட்டேல் தனது அரை சதத்தை பதிவு செய்தது மட்டுமின்றி, அணிக்கு தேவையான ரன்களையும் சேர்க்கத்தொடங்கினார் ஆனால் இவரும், 53 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஸ்டோய்னிஸ் 14 ரன்களும், பவன் நெகி 5 ரன்களும், அதிரடி காட்டிய மொயின் அலி 26 ரன்களும் எடுத்து வெளியேறினர்.இறுதியில் உமேஷ் யாதவ் 1(1) ரன்னிலும், ஸ்டெயின் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக பெங்களூர் அணிக்கு கொடுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது.

பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக பர்தீவ் பட்டேல் 53(37) ரன்களும், மொயின் அலி 26(16) ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணியின் அதிரடிக்கு சோந்தக்காரரான ஷேன் வாட்சன், டூ பிளஸ்சிஸ் ஆரம்பம் முதலே சற்று நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

பெங்களூர் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இவர்கள் தடுமாறத்தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் வாட்சனை 5 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ‘குட்டி தல’ சுரேஷ் ரெய்னாவை 0 ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்டெயின் தனது வேகத்தில் வெளியேற்றினார்.இவரைத்தொடர்ந்து களமிறங்கிய டூ பிளஸ்சிஸ் 5 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 29 ரன்களும், ஜடேஜா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து வந்து வீரர்கள் அனைவரும் அணிக்கு தேவையான ரன்களை சேர்க்காமல் வெளியேறினாலும், தல தோனி தன்னுடைய அதிரடியை காட்டி பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பயத்தை காட்டினார்.

இதில் தல தோனி 35 பந்துகளில் தனது அரை சத்தினை பதிவு செய்து, எனக்கு அதுமட்டும் போதாது அணியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன்னுடைய அதிரடியை வெளிபடுத்தினார். அடுத்ததாக பிராவோ 5 கேட்ச் ஆகி வெளியேறினார்.ஆட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியது, இறுதி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தல தோனி முதல் பந்தில் 4 ரன்களும் அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். அதுமட்டுமின்றி 5 பந்தையும் சிக்ஸருக்கு பறக்க விட்டார்.

கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தாகூர் ரன் அவுட் ஆக, அதிரடி காட்டிய டோனி 84 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டனர். இதன் மூலம் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்தது. பெங்களூர் அணியின் 3 வது வெற்றியாகும்.

இதில், பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டெயின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாஹல், சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of