IPL 2019: ஐதராபாத்தா.., ராஜஸ்தானா.., முதல் வெற்றி யாருக்கு?

259

அனல் பறக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் ஐதராபாத்தில் பல பரிட்சை மேற்கொள்ள உள்ளனர். இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.

இதில், சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் அணி பஞ்சாப்பிடம் 14 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது. இவ்விரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்திலேயே வெற்றியை பரிகொடுத்ததால், இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிக்க வேண்டும் என ஆர்வத்தில் உள்ளனர்.

இது போன்றே முதல் வெற்றியை தன்வசமாக்கும் முயற்சியில் மும்பை, பெங்களூர் அணிகள் மோதியதால் அன்றைய ஆட்டம் அனல் பறக்க தொடங்கியது, அது போலவே இன்றைய ஆட்டமும் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

(சன்ரைசர்ஸ்) வில்லியம்ஸ் தலைமையில் வார்னர், மனிஷ்பாண்டே பேர்ஸ்டோவ், புவனேஸ்வர்குமார், விஜய் சங்கர், ரஷித்கான், கவுல், யூசுப் பதான் போன்ற வீரர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது கடைசி கட்டத்தில் ஐதராபாத்தின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அந்த அணிக்கு அவசியமாகும். சொந்த மண்ணில் விளையாடுவது ஐதராபாத்துக்கு கூடுதல் பலமாக உள்ளது.

(ராஜஸ்தான்) ரகானே தலைமையில் ஜோஸ்பட்சர், ஸ்டீபன் சுமித், பென் ஸ்டோக்ஸ், சாம்சன், ஆர்ச்சர், ஜெய்தேவ் உன்கட் குல்கர்னி போன்ற வீரர்கள் உள்ளனர்.

அந்த அணி முதல் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற போது ஜோஸ் பட்லர் (69), மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது, பின்னடைவாக அமைந்தது. அந்த சர்ச்சையில் இருந்து வெளியே வந்து முதல் வெற்றியை ருசிக்க ராஜஸ்தான் போராடும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of