IPL 2019 – சென்னையில் நடக்கும் 2வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

614

சென்னையில் வருகிற மார்ச் 31ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 26ம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்க உள்ளது.

12வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர் இன்று (மார்ச் 23) சென்னையில் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில், வருகிற மார்ச் 31ம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான 2வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியது. அதில், வருகிற மார்ச் 31ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 26ம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்க உள்ளதாகவும், அதே சமயத்தில் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of