மும்பையை எதிர்கொள்ள போவது யார்..? சென்னையா? டெல்லியா?

490

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை தெரிங்கிக்கொண்டு இருக்கின்றது. மும்பை அணி முதலில் இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெளியேற்றி ஆட்டத்தில் ஐதராபாத்தை வெளியேற்றி டெல்லி அணி முன்னேறியது.

இதனைத்தொடர்ந்து இன்று சென்னை அணியுடன் விசாகப்பட்டினத்தில் டெல்லி அணி மோத உள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெறுகின்றதோ அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும்.

சென்னை அணி தொடர்ந்து மூன்று ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே தன்வசம் வைத்துள்ளதால் இன்றைய ஆட்டத்தை வென்றாக வேண்டும் என கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதே போல டெல்லி அணியும் சென்னை அணியிடம் தொடர்ந்து இரண்டு லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தால் இந்த முறை வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என இவர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து நிச்சயம் உண்டு என்பதில் எந்த ஒரு அய்யமும் இல்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of