IPL 2019: டாஸ் வென்ற டெல்லி.., அசத்தல் பந்து வீச்சு

320

அனல் பறக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் 8 வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றனர். அதில் மாலை நடைப்பெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டனர்.

அதன் பின்பு இரவு தொடங்கும் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் டெல்லியில் பல பறிச்சை மேற்கொள்கின்றனர்.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்க தயாரானது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான நைக், க்ரிஸ் லின் ஆரம்பமுதலே டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சற்று தடுமாற்றத்துடன் விளையாடினர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட டெல்லி அணியின் பந்து வீ்ச்சாளர்கள் நைக்-யை சொர்ப்ப ரன்களில் வெளியேற்றினர். அடுத்து வந்த உத்தப்பா விளையாடத்தொடங்கும் போது க்ரிஸ் லின் (20) ரன்களில் வெளியேறினார், பின்பு களமிறங்கிய ரானா-வும் இவர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் (1) வெளியேறினார். அவரை தொடர்ந்து, வந்த வேகத்திலேயே கில்லும் வெளியேறினார்.

தற்போது தினேஷ் கார்த்திக், ரஸ்செல் விளையாடி வருகின்றனர். இதில் கொல்கத்தா 10 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of