வெளியானது ஐ.பி.எல். அட்டவணை : முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ்

885

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020ஆம் ஆண்டு சீசன் மார்ச் மாதம் 29ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் மே மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of