34-வது லீக் ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

215

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். ரோகித் 30 ரன்னிலும், டி காக் 35 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்களை எடுத்தது. இதையடுத்து டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன் பின் களமிறங்கிய டெல்லி அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 128 மட்டுமே எடுத்து. இந்நிலையில் 40 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of