IPL போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல்? – பிசிசிஐ தகவல்

559

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஐபிஎல் அட்டவணையை வெளியிட வாய்ப்பில்லை என பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என தெரிவித்தார்.

ஆனால் ஐபிஎல் தொடர் மார்ச் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அட்டவணை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிட வாய்ப்பில்லை என பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.