பொதுத்தேர்தல் காரணமாக 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் வெளிநாடுகளில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 12வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு முகமைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஐ.பி.எல் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.