20 வயசுல தான் தெரியும்.. IPL-ல் ஜொலிக்கும் தமிழக வீரர்..

5468

வறுமையின் பிடியில் சிக்கி, கடைசி மூச்சைத் தள்ளி மேலே வந்து முளைத்த ஒரு செடியின் வரலாறு பற்றி தெரியுமா..? ஆம்.. தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எல் வீரரான ஜே.பி.நடராஜன், பற்றி இந்த கட்டூரை தொகுப்பில் பார்க்கலாம்..

சேலம் மாவட்டத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் இருக்கும் சிறிய கிராமம் தான் சின்னப்பன்பட்டி. அந்த கிராமத்தில், பல்வேறு கனவுகளுடனும், பல்வேறு ஆசைகளுடனும் வலம் வந்தவர் தான் ஜே.பி.நடராஜன்.

சிறிய வயதில் இருந்தே வறுமையின் பிடியில் சிக்கி, பல போராட்டங்களை சந்தித்த இவர், பென்சில், பேனா போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டுள்ளார். 5 வயதில் டென்னிஸ் பந்தின் மூலம் கிரக்கெட் விளையாட தொடங்கிய நடராஜன், தனது 20-வது வயதில் தான், கிரிக்கெட் பந்தை முதன்முறையாக பார்க்கிறார்.

அந்த பந்தின் வழியே கிரிக்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்ட இவர், ரஞ்சித் டிராபியில் விளையாடி வந்தார். அதில் அவரது ஆட்டத்தை பார்த்தவர்கள், ஐ.பி.எல் அணியில் ஏலத்தை எடுத்தனர், அதன்பிறகு, பல்வேறு தடைகளை தகர்தெறிந்து சாதித்த இவர், தற்போது சன் ரைசஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார்.

பலரது கனவு விக்கெட்டான, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணியின் போட்டியில் பறித்து அசத்தினார். இவரது திறமை பாராட்டி, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, டுவீட் செய்திருந்தார்.

எவ்வளவு தான் உயரத்திற்கு சென்றாளும், தமிழகத்தை மறக்காத நடராஜன், சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி, இலவசமாக கிரிக்கெட் கற்றுத்தந்து வருகிறார். தற்போதுள்ள சாதனைகளை போல், இன்னும் பல்வேறு சாதனைகளை படைத்திட பலரது சார்பில் வாழ்த்துக்கள்..

Advertisement