ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

553

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதியை மறுத்துவிட்டது. இதனையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 12-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சென்னை மைதானத்தில் முதல் தகுதி சுற்றுப்போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கேலரிகளிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்க முடியும். அதற்கு அனுமதி கிடைக்காததால் கூடுதல் இடம் கருதி ஐதராபத்திற்கு போட்டி மாற்றப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of