ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.., காரணம்?

1096

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை இந்திய மட்டுமின்றி உலக நாடுகளில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் சில வாரங்களுக்கு முன்பு புல்வாமாவில் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனால், நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளிக்கத்தொடங்கினர். அப்போது பிப்.14 முதல் மார்ச்.17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது நினைவிருக்கலாம்.

இதை எல்லாம் சகித்துகொண்டு இருக்க முடியாது என்பதால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது (பாகிஸ்தானை சீண்டிப்பார்க்கும் வகையில்) இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பவாத் அஹமத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of