சூடுபிடிக்கும் ஐபிஎல்.., களைகட்டும் டிக்கெட் விற்பனை தொடக்கம்

189

12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வரை காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் 12-வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் டிக்கெட் விற்பனையாகும. காலை 11.30 மணிக்கு டிக்கெட் வினியோகம் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். மதிய உணவு இடைவேளை நேரததில் (12.30- 2 மணிவரை) கவுண்டர்கள் மூடப்பட்டு இருக்கும். அடுத்த நாட்களில் காலை 10 மணிக்கே டிக்கெட் விற்பனை தொடங்கும்.

இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 சி,டி மற்றும் இ ஸ்டாண்டில் கீழ் பகுதிக்கான இந்த விலையிலான டிக்கெட்டுகள் விக்டோரியா சாலையில் உள்ள 6 நம்பர் பூத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல ரூ.2,500 (சி மற்றும் டி ஸ்டாண்ட் மேல்பகுதி), ரூ.5 ஆயிரம் (சி மற்றும் டி ஸ்டாண்டின் ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ்), ரூ.6,500 (எச்.ஸ்டாண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ், பெவிலியன் டெரஸ்) ஆகிய விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.

இதேபோல புக்மை ஷோ (in.bookmyshow.com) என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். குறைந்த விலையான ரூ.1,300க்கான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது