கோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார்? வரலாறு யார் பக்கம்? சில துளிகள்

688

விண்ணை பிளக்கும் சிக்ஸர்களாலும், மண்ணை பிளக்கும் விக்கெட்டுகளாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியை மட்டும் 12 ஆண்டுகளாக விருந்தாக வைக்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் என்றும் அழியாத ரசிகர்கள் பட்டாலத்தையும், பல முறை கோப்பையை தன்னுடைய கோட்டைக்கு கொண்டு சென்ற இரண்டு மாபெரும் அணிகள் மோத உள்ளனர்.

அந்த இரு அணியில் ஓர் அணியில், வீரர் ஒருவன் உள்ளார், இவர் பெயரை சொன்னால் போது கிரிக்கெட் உலகமே நடுநடுங்கும், இவர் நடுவரின் முடிவிற்காக காத்திருக்கமாட்டார், இவரின் முடிவிற்காக நடுவர்கள் காத்திருப்பார்கள். இவர் கிரீஸ்-க்கு பின்னால் இருந்தால் கோட்டை தாண்டாதே என பல முறை ஐசிசி (ICC) எதிரணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவரின் பெருமையை சொல்ல சில நிமிடங்கள் போதாது.அவர் தான் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ் தோனி, இவரின் தலைமையில் ஒரு அணி உள்ளது. அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும், பார்க்க ஒரு சீட் கிடைக்காத என ஏங்கும் பல கோடி ரசிகர்கள் இங்கு உண்டு.

விசில் போடு என்ற ஆரவாரத்துடன் பிறந்த அணி ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’. ஐபிஎல் தொடரில் அனைத்து முறையும் குவாலிபயர் வரை வந்த ஒரே அணி என்ற பெருமையை பின்னால் வைத்து விட்டு, எனக்கு இது போதாது என 3 முறை கோப்பையையும் தன்வசமாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இப்படி புகழ் உச்சத்தில் இருக்கும் சென்னை அணியை இரண்டு ஆண்டுகளுக்கு தடைவிதித்தனர்.சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும் சிங்கம், சிங்கம் தான் என்பதை நிறுபித்தது. தடைக்கு பிறகு களமிறங்கி விளையாடிய சென்னை அணி, தொடக்கத்திலேயே வெற்றி திலகத்துடன் தனது இரண்டு ஆண்டு கால பசிக்கு கோப்பையை ருசிபார்த்தது. ஓர் அணி இப்படி இருக்க, மற்றோரு அணியோ இவர்களையே மண்ணை கவ்வவைத்துள்ளது.

இந்த அணியில் ஒரு ஜாம்பவான் இருந்தார் அவரின் பெயரை சொன்னால் பேட்டே எழுந்து நிற்கும், பந்துகள் பதிரி அடித்து ஓடும், இவர் தான் கிரிக்கெட்டின் கடவுள் என அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட ஒரு தலை சிறந்த வீரர்,அவர் தான் சிச்சின். இவரின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மாபெரும் வெற்றிகளுடன் பிரம்மாண்டமாக உருவானது. தற்போது மும்பை அணியை ரோகித் சர்மா வழிநடத்தி செல்கின்றார்.சென்னை அணி மற்ற அணிகளை எல்லாம் தொம்சம் செய்தாலும் இவர்களிடம் மட்டும் அடிபணிந்து விடுகின்றது. இவர்கள் இதுவரை மூன்று முறை கோப்பையை தன்வசமாக்கியுள்ளனர். அதில் இரண்டு முறை சென்னை அணியுடனே இறுதிப்போட்டியில் மோதினர். மீதமுல்ல ஒரு வெற்றி சென்னை அணி தடையில் இருந்த போது அவர்கள் பேற்றது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியும், மும்பை அணியும் 10 ஆண்டுகள் விளையாடி வருகின்றது.இதில் அதிக முறை சென்னையை எளிதில் வீழ்த்தியுள்ளது, அதுவும் இறுதிப்போட்டியில். அது போன்றே இந்த முறையும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் விளையாட உள்ளது.மும்பை அணி அவர்களை வென்று வரலாற்றை காப்பாற்றுமா அல்லது சென்னை அணி இவர்களுக்கு தோல்வியை பரிசளித்து வரலாற்றை மாற்றுமா என்று நாம் ஞாயிறு வரைக்கும் காத்திருந்து தான் ஆக வேண்டும். இந்தாண்டு தொடரில் சென்னை இவர்களை ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை.

இதே போன்று தான் கடந்தாண்டும் ஐதராபாத் அணியும் சென்னை அணியுடன் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இறுதிப்போட்டியில் ஆவர்களையே எதிர்கொண்டு எளிதில் வெற்றி பெற்றோம். அதே போல் இந்தாண்டு தொடரில் சென்னை அணி மும்பையை வீழ்த்தவில்லை. இறுதிப்போட்டியில் சென்னை அணியை மும்பை எதிர்கொள்ளும் போது மும்பையை வெற்றி பெற்றுள்ளது.இந்த வரலாற்றை தடுக்கு சென்னை கடுமையாக போராடும், சென்னையை தடுக்கு மும்பையும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மாபெரும் ராஜ விருந்தாக இருக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of