ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

297

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணியினர் பந்து வீச்சில் அசத்தினர். இதனால் கொல்கத்தா அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.லின் ரன் எதுவும் எடுக்காமலும், கில் 14 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், சுனில் நரைன் 11 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 14 ரன்னிலும், பிராத்வைட் 5 ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அவர் அரை சதமடித்து அசத்தினார்.இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது.தினேஷ் கார்த்திக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரியுடன் 97 ரன்களை எடுத்துள்ளார்.பின்னர் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், சஞ்சு சாம்சனு களம் இறங்கி விளையாடினர். ரகானே 34 ரன் அடித்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். சாம்சன் 22 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்த வந்த வீரர்களான ஸ்மித் 2  ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். அதன் பின் வந்த ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். அவர் 47 ரன் இருக்கும்போது அவுட் ஆனார். இறுதியில் ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of