ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி

266

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேலும் விராட் கோலியும் களமிறங்கினர்.கோலி 13 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். பார்திவ் பட்டேல் 43 ரன்னிலும் மொயின் அலி 4 ரன்னிலும், அக்‌ஷதீப் நாத் 3 ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நின்ற டி வில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்துள்ளது.டி வில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 82 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணைக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 185 ரன் எடுத்து தோல்வியை தழுவியது.

பஞ்சா அணி சார்பில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 42 ரன்னும் மயாங்க் அகர்வால் 35 ரன்னும், நிக்கோலஸ் பூரன் 46 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், சைனி 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மொயீன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of