பயங்கரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான்

580

இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

இந்த நிலையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈரான் ராணுவம் ஈடுபட்டிருந்தது.

அப்போது அங்கு புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

எனவே, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி பேட்டி அளித்தார்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாக தெரியும். இதற்கு பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது இந்த தாக்குதலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of