ஈரான் நடத்திய தாக்குதல் – 11 அமெரிக்க வீரர்கள் படுகாயம்

165

கடந்த சில நாட்களாகவே ஈராக் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே போர்முலும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களின் அறிக்கைகளும் காரசாரமாக அமைந்தது வருகிறது. இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் புரட்சிகர ராணுவ படை தளபதி சுலைமானியை, அமெரிக்க ராணுவம் கொன்றதால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது 15க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of