சரக்கு விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

356

ஈரானில், சரக்கு விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் சிக்கி, 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான போயிங் 707 ரக விமானம், டெக்ரானில் இருந்து, ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலையின் காரணமாக, விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் விமானம் கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி , 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.