வெளியுறவு மந்திரி திடீர் ராஜினாமா – ஈரான்

524

ஈரானின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வந்தவர் முகமது ஜாவத் ஷாரீப்  நேற்று முன்தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில் பதவியில் தொடர முடியாததற்கும் எனது பதவி காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என குறிப்பிட்டார்.

எனினும் முகமது ஜாவத் ஷாரீப்பின் ராஜினாமாவை அதிபர் ஹாசன் ருஹானி ஏற்றுக்கொண்டாரா? அல்லது நிராகரித்தாரா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

ஐ.நா.வுக்கான ஈரான் தூதராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப்பை கடந்த 2013-ம் ஆண்டு வெளியுறவு மந்திரி பொறுப்புக்கு அதிபர் ஹாசன் ருஹானி நியமித்தார்.

ஈரானுக்கும் பிற சர்வதேச நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன்படிக்கை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் முகமது ஜாவத் ஷாரீப் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of