துணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்

411

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டு துணை சுகாதாரத்துறை அமைச்சர் இராஜுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரான் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of