தரையிறங்கியபோது விமானத்தில் திடீர் தீ விபத்து

383

ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள மெக்ராபாத் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஈரான் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் 100 பயணிகளும் விமான ஊழியர்கள் சிலரும் இருந்தனர்.விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் விமானத்தில் தீப்பிடித்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. விமானத்தில் இருந்து பயணிகள் விமான ஊழியர்கள் என அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of