என்னது வெறும் 400 ரூபாயில் கோவா முழுவதையும் சுற்றிப்பார்க்க முடியுமா?

502

பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கான சலுகைகளை அறிமுகப்படுத்தும். அதன்படி கோவாவை சுற்றிப்பார்க்க ஒருவருக்கு ரூ.400 என அறிவித்துள்ளது.


சுற்றுலாவிற்கு பெயர் போன கோவாவிற்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து இளம் வயதினருக்கும் இருக்கும் ஓர் ஆசையே. இந்நிலையில், கோவா செல்ல ஒரு சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘HOP ON HOP OFF GOA BY BUS’ என்ற பேருந்து சலுகையின் மூலம் தனி நபர் ஒருவர் ரூ.400 செலவில் கோவாவை சுற்றிப் பார்க்கலாம். இதில் தனி நபர் ஒருவர் வடக்கு கோவா அல்லது தெற்கு கோவாவை ஒருநாள் சுற்றிப்பார்க்க ரூ.400, வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா ஆகிய இரண்டையும் சேர்த்து இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.600 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றிக்காண்பிக்கப்படும் இந்த சலுகை கோவாவிற்கு சென்ற பின் அங்கு மட்டுமே செல்லும். மேலும் கோவா வரை செல்லும் போக்குவரத்து செலவு இதில் சேர்கப்பபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of