நீட் தேர்வு ஆள்மாறாட்டம்..! மகனை மிஞ்சிய அப்பா..! வெளிவந்த திடுக் தகவல்..!

535

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பலநாட்கள் தலைமறைவாக இருந்த மாணவன் இர்ஃபான், நேற்று சேலத்தில் சரணடைந்தார். அவருடைய தந்தை சஃபியிடம் கடந்த இரண்டுநாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த விசாரணையின் போது, மருத்துவப்படிப்பை பாதியில் கைவிட்டவர் சஃபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவப்படிப்பை முடிக்காமல், திருப்பத்தூரில் மருத்துவமனை நடத்தி, பல்லாயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்திருக்கும் அதிர்ச்சித்தகவலும் வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து, சஃபியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே, இடைத்தரகர் கோவிந்தராஜனிடம், சஃபியுடன் உள்ள தொடர்பு குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.