இதுக்கு தான் ஜீவ சமாதியா..? ஏமாறிய மக்கள்..! அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

1351

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த இருளப்பசாமி என்பவர், ஜீவ சமாதி அடையப் போவதாக அறிவித்தார். இருளப்பசாமி 13ஆம் தேதி அதிகாலை ஜீவ சமாதி அடையப் போவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.

இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாசாங்கரை கிராமத்தில் திரண்டனர். ஆனால் ஜீவ சமாதி நிகழ்ச்சி தோல்வியில் முடிந்ததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஜீவசமாதி அடையப் போவதாக ஏமாற்றி நன்கொடை வசூலித்ததாக, இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம், கண்ணன் மற்றும் ஆனந்த் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of