உளவறியும் சாதனங்களை பொருத்தியதா பாகிஸ்தான் ? வெளியானது ஸ்கேன் முடிவு

409
abhi-3.3.19

கடந்த 27ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய அபிநந்தன் மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அரசால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக செய்திகள் வந்தன.

பாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி அனுப்பியிருக்கலாம் என்ற யூகச்செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அபிநந்தனின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of