மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் ?

542

“மைனா” தொடங்கி “ஆடை” படம் வரை தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் அமலா பால், அண்மையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அமலாபாலை தேர்வு செய்து இருந்தனர். ஆனால் கதாபாத்திரத்தின் தோற்றத்திற்காக அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அது சரிவர அமையவில்லை என்றும், ஆதலால் அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் சரித்திர கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அமலாபாலுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்தும் நீக்கி விட்டனர்.

Advertisement