அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு காங்கிரஸ் காரணமா?- நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மறுப்பு

701

அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு காங்கிரஸ் காரணமா என்று எழுந்த கேள்விக்கு பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்தில் 61 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த தசரா கொண்டாட்டத்தை காங்கிரஸ் கட்சி அனுமதி பெறாமல் நடத்தியதாகவும், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மக்கள் மீது ரயில் மோதிய பிறகும் உரையாற்றி கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள நவ்ஜோத் கௌர் சித்து, ரயில் விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு தான் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்தார்.

தசரா கொண்டாட்டம் அதே பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் என்றும் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

 

Advertisement