நியூசிலாந்து தாக்குதலுக்கு கோவாவில் பழி தீர்க்க முடிவு?

530

நியூசிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு உலக நாடுகளை உலுக்கிப்போட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த பயங்கர தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால், கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இங்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருக்க போலிஸார் உஷார் நிலையில் உள்ளன. இங்கு மட்டுமின்றி இஸ்ரோ நாட்டினர் அதிகமாக நடமாட்டும் இருக்கும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.