ஹெல்மெட் அணிய சொன்னது குத்தமா? கிரண்பேடி

452

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதல்வர் எந்த ஒரு முன்அறிவிப்பின்றி தர்ணாவில் ஈடுபடுவது முறையற்றது.அவர் சில நாட்களுக்கு முன்பு 36 பிரச்னைகள் தொடர்பாக கடிதம் அனுப்பினார், அதில் முக்கிய பிரச்னையான நியாய விலைக்கடை தீர்க்கப்பட்டுள்ளது. அவரை வருகின்ற பிப்ரவரி 21 காலை சந்திக்க நேரம் கூட ஒதுக்கிருந்தேன்.

ஹெட்மெட் அணிவது கட்டாயம் என ஐகோர்ட், சும்ரீம் கோர்ட் ஆகியன உத்தரவிட்டுள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தினமும் ரேடியோவில் பேசி வருகிறார்.

ஆனால், முதல்வர் நாராயணசாமி அவகாசம் வழங்க வேண்டும் என்று சொல்கின்றார். ஹெல்மெட் அணிய சொல்வது தவறா? நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வலியுறுத்துவது தவறா? இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Advertisement