மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ- யில் கேள்வி

2787

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது. சிலர் இதனை ஆதரித்து கருத்து வெளியிட்டாலும் கேரளா, பஞ்சாப் போன்ற மாநில சட்டசபைகளில் சிஏஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார்.

இதில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of