காலமானார் எஸ்.பி.பி..! பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..? இல்லையா..?

1104

தமிழ் சினிமாவின் முக்கிய பாடகர்களில் ஒருவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தனது தேனிசை குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வைரஸ் தொற்று நீங்கிய நிலையில், நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று காரணமாக தான் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்தது.

இதற்கிடையே, எஸ்.பி.பியின் இறுதி சடங்கு தொடங்குவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு எஸ்.பி.பியின் உடல் வீட்டுக்கு கொண்டு வர இருக்கிறது என்றும், தாமரைபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அது இன்று இரவா, நாளை காலையா என்பது, அரசு அனுமதி கொடுத்த பிறகு தான் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்று நீங்கிய பிறகே அவர் உயிரிழந்திருப்பதால், பொதுமக்கள் அஞ்சலிக்கு தடை இல்லை என்றும் கூறப்படுகிறது.