தொடர் மிரட்டல் விடுத்த குண்டு பயங்கரவாதி கைது..!

430

ஈராக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவனாக கருதப்படும் அபு அப்துல் பாரி, அரசுக்கு தொடர் மிரட்டல்களை விடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, அபு அப்துல்லை, மொசூல் நகரில் வைத்து ஈராக் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஆனால், 250 கிலோ எடை கொண்ட பயங்கரவாதியை காரில் ஏற்ற முடியாததால், சரக்கு வாகனம் வரவழைக்கப்பட்டு பின்னர் அப அப்துல் அழைத்து செல்லப்பட்டார்.