ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! -நிதிபெற்று உதவிய பால்ராம் சிங் உட்பட 5 பேர் கைது..!

1916

மத்திய பிரதேச மாநிலத்தில் IS அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காக IS அமைப்பிமிருந்து நிதி பெற்று அவர்களுக்கு உதவியதாக பால்ராம் சிங், பாகவேந்த்ரா சிங், சுபம் திவாரி, சுனில் சிங் மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மத்திய பிரதேசத்தில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் ஐ எஸ் அமைப்பிற்கு நிதி பெற்று வந்துள்ளனர். இதில் பால்ராம் என்பவர் ஏற்கனவே தொலைபேசி தொலைதொடர்பை சட்டவிரோதமாக நடத்தியதாக 2017 ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவன்.

மேலும் இன்னொருவன் கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவன். கைது செய்யப்பட்ட நாள்வரையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பிற்கு மத்திய பிரதேச மாநில இளைஞர்கள் நிதிபெற்று உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of