தேர்தல் ஆணையம் பாஜகவை சமாதானப்படுத்த இருக்கிறதா? – சந்தேகிக்கும் மம்தா பானர்ஜி

396

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியலமைப்புபடி செயல்படுகிறதா அல்லது மத்தியில் பா.ஜ.,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

4 போலீஸ் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் புகாரை தொடர்ந்து கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உட்பட 4 பேரை இடமாற்றம் செய்ய மேற்கு வங்க அரசிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தன்னிச்சையானது. உள்நோக்கம் கொண்டது. ஒரு தலைபட்சமானது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியலமைப்புபடி செயல்படுகிறதா அல்லது மத்தியில் பா.ஜ.,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு வரும் புதிய அதிகாரிகள் அந்த இடங்களுக்கு புதியவர்கள். அவர்கள், வாக்காளர்களை கவர பணம், சாராயம் விநியோகம் செய்வதை தடுப்பதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்