‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு இந்த நிலையா?

672

திருட்டு தனமாக இணையதளங்களில் புதிய படங்கள் பதிவிறக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் தொடர்ந்து புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில இணைய தளங்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படம் வெளியான ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.படத்திற்கு தொடர்ந்து மோசமான விமர்சனம் கிடைத்து வந்தாலும், காமெடி காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் படக்குழுவினர் சற்று ஆறுதல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சந்தோஷத்தையும் தகர்க்கும் விதத்தில் படம் வெளியான ஒரே நாளில் இணையதளத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இது போல் இணையதளங்களை மூட பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் புதிய படங்கள் வெளியாவதற்கு அனைத்து பட தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of