அனிரூத் – ன் கண்ணம்மா பாடல் இன்று வெளியீடு

392

அனிரூத் அவர் படங்களில் இசையமைப்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ அதே நேரம் மற்ற இசையமைப்பாளரின் படங்களிலும் பாடல் பாடுவதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இவர் பாடிய பாடல்கள் இதுவரை ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கண்ணம்மா என்ற பாடலை பாடி கொடுத்துள்ளார்.

சாம்.சி.எஸ் இசையில் அமைக்கப்பட்ட பாடல் இன்று இணையத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். சில்பா மஞ்சு நாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஹரிஷ் கல்யாண் முன்னதாக நடித்த ‘பியார் ப்ரேமா காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தின் பாடல்கள் கடந்தாண்டு இறுதிவரை பாடல் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது. அதே போல் இந்த படமும் வெற்றி படமாக அமையுமா என்பதை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.