ஏ.கே 47 ரக துப்பாக்கியை ஏந்தியதால் இஸ்ரேல் ராணுவம் அதிரடி..!

383

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.  இதற்கிடையில்,  காசாமுனை பகுதியில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. Image result for israel military

இந்நிலையில், காசாமுனை பகுதியில் இருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு, தங்கள் நாட்டை நோக்கி வந்தனர் எனக்கூறி, பாலஸ்தீன போராளிகள் சிலரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. 

இதையொட்டி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ காசாவில் இருந்து இஸ்ரேலை நெருங்கி கொண்டிருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டோம். Related image

அவர்கள் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளுடன் அணிவகுத்து வந்தனர். அது மட்டுமில்லாமல் கையெறிகுண்டு லாஞ்சர்கள் மற்றும் கையெறிகுண்டுகளும் வைத்திருந்தனர். 

அவர்களில் ஒருவர் இஸ்ரேலுக்குள் நுழைந்ததும் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் ” எனக் கூறப்பட்டுள்ளது.