காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்

739

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனை நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைகள், ஹமாஸ் பயங்கரவாதிகளின் தொலைக்காட்சி நிலையத்தை தரைமட்டமாக்கியது.

இதைதொடர்ந்து காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் போர் நடைபெற்றது.

இந்நிலையில் எகிப்து நாடு மேற்கொண்ட சமரச முயற்சியால் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது

Advertisement