இஸ்ரோ தலைவரையும் விட்டு வைக்காத டுவிட்டர் “ஃபேக்குகள்”

299

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில் அவரது பெயரில் பல போலி கணக்குகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு விக்ரம் லேண்டரின் தொலைதொடர்பு துண்டிப்படைந்ததால் நிலவில் நிலைநிறுத்துவதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் அந்த லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியிருப்பதாகவும் லேண்டருக்கு இன்னும் தொலைதொடர்பு கிடைக்காததால் அது கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லையென்ற போதிலும், பல போலி கணக்குகள் அவரது பெயரில் இயங்கி வருகின்றன.

அதிலிருந்து தகவல்களும் பகிரப்படுகின்றன. அது இஸ்ரோ தலைவரின் உண்மையான கணக்கு என எண்ணி சிலர் அந்த தகவல்களை பகிர்கின்றனர். உண்மையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லை என்பதே நிதர்சனம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of