GSLV MARK 3 D2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

102
isro

ஜி சாட் 29 தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் GSLV Mark 3 D2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

take GFX இந்நிலையில் இஸ்ரோ, உயர் நுணுக்கமான தகவல் தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.

ஜிசாட்-29 செயற்கைகோள், பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது10 ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்து நமக்கு தேவையான தகவல்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு Q V என்ற நவீன தொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகள், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையை பயன்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கஜா புயல் திசை மாறினால் GSLV MARK 3 ராக்கெட் விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், GSLV MARK 3, D 2 ராக்கெட், ஜிசாட்- 29 செயற்கைகோள் நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் திட்டமிட்டபடி செலுத்தப்படும் என்றும் ஒருவேளை கஜா புயல் திசைமாறினால் ராக்கெட் விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜி சாட் 29 செயற்கைகோள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தின் கீழ் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறினார். இந்தியாவின் புதிய மைக்கல் திட்டமாக இந்த ராக்கெட்டை அமையும் என சிவன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here