நிலா எங்கிருந்து வந்தது..? “கமல் மாதிரி டுவீட் போட்ட இஸ்ரோ!”

691

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மூலம், ஜுலை 15-ஆம் தேதி சந்திராயன் 2 என்ற விண்கலம் ஏவப்படவுள்ளது. இந்த விண்கலம், சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு செல்ல உள்ளது.

இதற்கு முன்னர் எந்த நாடும் அந்த பகுதிக்கு சென்றதில்லை. இந்நிலையில் இஸ்ரோ அதன் டுவிட்டர் பக்கத்தில் நிலவு குறித்து டுவீட் செய்துள்ளது.

அதில் கூறியிருப்பது பின்வருமாறு:-

சந்திரன் எங்கிருந்து வந்தது?’ என்று இஸ்ரோ ஒரு படத்துடன் ட்வீட் செய்து உள்ளது சந்திரனின் தோற்றத்திற்கு பின்னால் இருக்கும் நான்கு கோட்பாடுகளை விளக்கி உள்ளது.

“1. பிளவு கோட்பாடு

பூமியின் சுழற்சி வேகம் காரணமாக சந்திரன் பூமியில் பிளவுபட்டு பிரிய காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் அதன் ஈர்ப்பு விசையானது இந்த பகுதியை நங்கூரமிட்டு நமது இயற்கை செயற்கோளாக மாறியது.

2. ராட்சத தாக்க கருதுகோள்

பூமிக்கும் மற்றொருவான வான் பொருளுக்கும், இடையிலான மோதலின் போது கிரகத்தின் ஒரு பகுதி உடைந்து சந்திரனாக மாறியது.

3. இணை கூட்டல் கோட்பாடு

ஒரு ஒற்றை துளை வாயு ஒரு கருந்துளையைச் சுற்றும் போது சந்திரனையும் பூமியையும் உருவாக்கியது.

4. பிடிப்பு கோட்பாடு

பறக்கும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு சந்திரன் ஒரு இணைக்கப்படாத பொருளாக இருந்தது.”

இந்த நான்கு கோட்பாடுகளையும் வெளியிட்டு உள்ள இஸ்ரோ இந்த கோட்பாடுகளில் எது சரியானது என கேள்வி எழுப்பி உள்ளது. இஸ்ரோவின் இந்த டுவீட் நடிகர் கமலஹாசன் பேசுவதைப் போன்று குழப்பமாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement