விக்ரம் லேண்டர்..! மீண்டும் கிடைத்த சோகச் செய்தி..! டுவீட் போட்ட இஸ்ரோ..!

1917

சந்திரயான் 2 என்ற ட்ரீம் ப்ராஜக்ட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி, அதை செய்து முடித்தது. இறுதியில் நிலவுக்கு அனுப்பும்போது, கடைசி நேரத்தில் சிக்னல் கிடைக்காமல் லேண்டர் காலை வாரியது.

இந்த சாதனை மட்டும் நிகழ்த்தப்பட்டிருந்தால், நலவின் தென்துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கும். இந்த நிகழ்வு நடந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று லேண்டர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

தொடர்ந்து சிக்னலை பெறுவதற்கு முயன்று வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரோ அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளது.

அதில், “நாங்கள் ஆர்பிட்டரின் மூலம் லேண்டர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் தற்போது வரை அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அதுனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அதிக முயற்சிகளை எடுத்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Arasan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Arasan
Guest
Arasan

விக்ரம் என்று பெயர் வைத்ததுக்கு பதிலாக ‘மோடி’ என்றோ மற்றோ வைத்திருந்தால் அங்கிருந்து இதுக்குள்ளே கெளம்பி பிரான்ஸோ , ஜப்பானோ போயிருப்பான்!