திரையரங்குகள் மூடப்பட்டு இன்றோடு 150 நாட்கள் ஆனது

270

வரலாறு காணாத வகையில், முதல்முறையாக, தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு, இன்றுடன் 150 நாட்களாகின்றன. எனவே, உடனடியாக, திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திரைப்படங்களின் 150-வது நாள் வெற்றி விழா என்ற பதாகைகளைப் பார்த்துப்பழகிப் போயிருந்த நமக்கு, தற்போது 150-வது நாளாக மூடப்பட்ட திரையரங்கம் என்ற காட்சிகள்தான் நிழலாடுகின்றன.

வைரஸ் தொற்று ஏற்பட்டவுடனேயே, மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் திரையரங்குகள் நாடு முழுவதும், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் மூடப்பட்டன.

இந்தச் சூழலில், தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த திரையுலகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடும் நிபந்தனைகளை விதித்தாவது, திரையரங்குகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து, தமிழக அரசுக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கியது போல, திரையரங்குகளையும் தமிழ்நாட்டில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, 150-வது நாளான இன்றும் கூடுதலாக அதிகரித்துள்ளது. நாளையா தினம் சுதந்திர தின உரையின்போது, இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட வேண்டும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்,

Advertisement