‘பிக் பாஸ்’ யார் அந்த அடுத்த தொகுப்பாளர் ? | Big Boss Season 4

763

 

‘பிக் பாஸ்’ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. கடந்த சில ஆண்டுகளாக மக்களில் ஆதரவுடனும் அதே சமயம் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் ஒன்று மற்றும் இரண்டு முடிந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் மூன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த மூன்றாம் சீசனும் முடியவுள்ள நிலையில் இதன் நான்காம் சீசனில் யார் தொகுப்பாளராக வரப்போகிறார்? என்று யூகம் தற்போதே இணையத்தில் பிரபலமாகி வருகின்றது. சரத்குமார், சூர்யா, சிம்பு என்று இணையத்தில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது. குறிப்பாக சிம்பு தான் அடுத்த சீசன் தொகுப்பாளர் என்று செய்திகள் இணையத்தில் வளம் வந்தது.

ஆனால் அந்த விஷயங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பிக் பாஸ் குழு. சீசன் ஒன்று முதல் மூன்று வரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் அவர்களே மீண்டும் தொகுப்பாளராக தொடர்வார் என்று அந்த குழு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of