பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்

190

பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்னே பாடலை பாடினார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.

அதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான்  திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார். திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான அனைத்து நெட்டிசன்களுக்கும் டி.இமான் நன்றி தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of