மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது – அமித்ஷா

220

மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, நேருக்கு நேர் மோத முடியாதவர்கள், தோல்வி பயத்தில் கூட்டம் சேர்த்து கொண்டிருப்பதாக கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவது பா.ஜ.க பலத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடியை தோற்கடிக்கவோ, பதவியில் இருந்து நீக்கவோ முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறும் பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.