பழனிசாமி பதவியில் நீடிப்பது நல்லதல்ல – நல்லகண்ணு

133
NallaKannu

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் பதவி விலகி குற்றச்சாட்டை பொய் என நிருபித்து  பதவியில் அமர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

நசுக்கப்படுகிறதா நான்காவது தூண் என்ற தலைப்பில் விருதுநகரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, ஆட்சி, அதிகாரத்தில் இருப்போர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் வேலை என்றும் ஆனால் தற்போது வந்துள்ள பல இடையூறுகள் நான்காவது தூணுக்கு ஆபத்து விளைவிப்பதாக கூறினார்.

தமிழகத்தில் நடக்கும் ஊழல் நிறைந்த ஆட்சியில், இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டி கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டிய நல்லகண்ணு, நீதிமன்றம் உத்தரவிட்டு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட பிறகும் முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிப்பது நல்லதல்ல என்றார்.

முதலமைச்சர் பதவி விலகி குற்றச்சாட்டை பொய் என நிருபித்து பின் பதவியில் அமர வேண்டும் என்றும் அதுதான் ஜனநாயகம் என நல்லகண்ணு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here