மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்

249

மகாராஷ்டிராவில் எந்த கட்சியாலும், ஆட்சி அமைக்க முடியாததை அடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று கட்சி பிரதிநிதிகளும் பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்தநிலையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைத்து ஆட்சி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைச்சர் பதவியை பகிர்ந்துக் கொள்ள மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள சிவசேனா  தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன